நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என தேங்காய் உடைத்து விசேட வேண்டுதல்....
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்று வேண்டும் என வேண்டி தேங்காய்கள் உடைத்து விசேட வேண்டுதல் ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சரத் லொரோன்சுஹேவா அவர்களின் தலைமையில் இன்று (25) இடம்பெற்றது
இவ் விசேட வேண்டுதலில் 20க்கும் மேற்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டதுடன் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்
சரத் லொரோன்சுஹேவா
திருகோணமலை மாவட்ட பொது மக்கள் சார்பிலும் நாட்டு மக்களின் சார்பிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் சீரற்ற ஆட்சியாளர்கள் மாற்றம் வேண்டும் என காளியம்மன் முன்னிலையில் தேங்காய்கள் உடைத்து வேண்டுதல் ஒன்றினை நிறைவேற்றிய தாகவும்
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை மீன்பிடியில் தொழிலினை தமது ஜீவனோபாயமாக கொண்டு செல்லும் சூழ்நிலையில் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் சரியான முறை வழங்கப்படாமையும் விவசாயத்திற்கு தேவையான உரம் மற்றும் அறுவடைக்கு தேவையான டீசல் சரியான முறை வழங்கப்படாமையானது திருகோணமலை மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு நாளுக்கு நாள் அனைத்து தேவைகளுக்கும் வரிசையில் நிற்கும் கலாச்சாரம் நீடித்து வரும் நிலையில் இவ்வாறான ஒரு ஆட்சியாளர்களால் இப் பிரச்சினைகள் சீர் செய்ய முடியாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகி அதனை சரியாக வழி நடத்தக்கூடிய எமது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களிடம் ஆட்சியினை கையளிக்குமாறு இதன்போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


