முட்டை மற்றும் இறைச்சிக் கோழி விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது திருமலையில் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் உறுதி...
நாட்டில் முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கான விலைகள் மேலும் அதிகரிக்கப்படமாட்டாது என கால்நடை வளர்ப்பு பண்ணை மேம்பாட்டு மற்றும் பால் பண்ணை முட்டை தொடர்பான இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்தார்.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக் கருவில் உருவான சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியினை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (28) திருகோணமலை கால்நடை திணைக்களத்தில் இடம்பெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
நாட்டில் நாளைக்கு நாள் கோழி இறைச்சியின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது அரசாங்கம் என்ற வகையில் இதற்கான மாற்று திட்டம் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்
இலங்கை நாட்டில் மட்டுமல்லாது முழு உலகிலும் நுகர்வு பொருட்களுக்கான விலை அதிகரித்த வண்ணமே உள்ளது காரணம் உலகில் ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக பெரும்பாலான உற்பத்திகள் குறைவடைந்து காணப்படுவதே ஆகும்
அந்த வகையில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்தது ஒரு சாதாரண விடயமே ஆகும் அந்தவகையில் நாட்டில் கோழி வளர்ப்பிற்கான தீவனங்கள் இறக்குமதிக்காக வரி நிவாரணம் பெறப்பட்டு போதிய அளவு கால்நடை தீவனங்கள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்
இவ்வாறு வழங்கப்பட்ட நிவாரணத்திணூடாக தீவனங்கள் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கான விலைகள் மேலும் அதிகரிக்க விடாமல் தடுக்க முடியும் எனவும் அரசாங்கம் என்ற வகையில் அதனை நாங்கள் பொறுப்புடன் செயல்படுத்துவோம் எனவும் கால்நடை வளர்ப்பு பண்ணை மேம்பாட்டு மற்றும் பால் பண்ணை முட்டை தொடர்பான இராஜாங்க அமைச்சர் டி. பி ஹேரத் தெரிவித்தார்
மேலும் நாட்டில் பால் உற்பத்தியின் 40 சதவீதம் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவற்றில் மிகுதி 60 வீதமான பால் உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அவற்றில் 11 மில்லியன் ரூபாய் கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் வேலைத்திட்டங்கள் சிறப்பான முறையில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து செல்ல படுவதாகவும் இதன்போது தெரிவித்தார்
மேலும் பால் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் பல திட்டங்கள் முன்னெடுத்து வருகின்ற போதிலும் கோழி பண்ணையாளர்களுக்கான சரியான ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு...
கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கு மாற்றுமல்லாது நாட்டில் ஏனைய இறைச்சி உற்பத்திக்கான அனைத்து வேலைத் திட்டங்களும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான வேலைத்திட்டத்தின் கீழ் எமது கால்நடை திணைக்களத்தின் ஊடாக தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அதன் வேலைத் திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரிவித்தார்
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.