தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் பயணித்த மூவர் : விபத்தில் ஒருவர் பலி...
திருகோணமலை-உவர்மலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (01) 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இல்லாமல் மூவர் பயணித்த நிலையில் அதிவேகத்தினால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் மின்கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த விபத்தில் திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த கே.வை.சஹன் மதுஸங்க (16வயது) என்ற சிறுவன் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாகவும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த இசுரு அக்ஸான் (20வயது) என்பவர் பலத்த காயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த கவிஸ்க இம்ஹான் (15 வயது) காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.