ஹொரவ்பொத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி...
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
றத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற கார் ஒன்றும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்விபத்து இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த காரில் பயணித்த திருகோணமலை அன்புவழிபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய பங்குத் தந்தையும் திருகோணமலை எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனருமான அருட்தந்தை ஜி.நிதிதாசன் அடிகளார் (வயது 50) எனவும்
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது குறித்த டிப்பர் வாகன சாரதியின் கவனயீனத்தால் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிசார் தெரிவித்தனர்.