Header Ads

Breaking News
recent

கல்வி எனும் ஆயுதத்தால் முழு உலகையும் வெல்லலாம் - இஷ்ஹாக் ரஹுமான்...


அலுவலக செய்தியாளர் நசீம்
யுத்தம் செய்யாமல் இரத்தம் சிந்தாமல் முழு உலகையும் கல்வி எனும் ஆயுதத்தால் வெற்றி கொள்ளமுடியும் என மதவாச்சியில் இன்று (14) பா. உ இஷ்ஹாக் ரஹுமான் தெரிவித்தார்.

மதவாச்சி மஹாசியம்பலாகஸ்கட அல் அக்ஸா முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய கட்டடதிற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஹம்தூன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்பள்ளி நிருவாகிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.