மனித உரிமைகளை மேம்படுத்தல் செயற்திட்டத்தில் இரண்டாண்டு திட்டத்தை நிறைவு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய அரச உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு
(ரவ்பீக் பாயிஸ்)
விழுது அற்றல் மேம்பாட்டு மையத்தின் திட்டமான இலங்கைப் பெண்களால் முன்னெடுக்கும் மனித உரிமைகளை மேம்படுத்தல் செயற்திட்டத்தில் இரண்டாண்டு திட்டத்தை நிறைவு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய அரச உத்தியோகத்தர்களை பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு இன்று (14) திருகோணமலை ஜீப்லி மண்டத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் உதவி அராங்க அதிபர் எஸ்.நிருபா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜுவிதன் சுகந்தினி மற்றும் நுன் நிதி மற்றும் அரச சார்பற்ற நிறுவன இணைப்பாளர் ஆகியோருடன் பல அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது இத்திட்டத்தின் பயனாளிகளான அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியம், மாவட்ட பெண்கள் சமாசம் , இளையோர் அமைபுக்கள் , மாற்றுத் திறனாளிகள் அமைப்பு போன்றவற்றின் பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் விசேட தேவையுடையவர்களினால் நடன நிகழ்ச்சியும் அரங்கேறியதுடன்
இத்திட்டத்திற்கு சிறந்த ஒத்துழைப்பு நல்கிய 05 அரச உத்தியோகத்தர்களுக்கான நினைவுப் பரிசில்கள் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.