Header Ads

Breaking News
recent

திருமலையில் இடம்பெற்ற பௌர்ணமி தினக் கலை நிகழ்வும் நூல் வெளியீடு மற்றும் மதிப்பளித்தல் நிகழ்வு....

வடமலை ராஜ்குமார்
அன்புவழிபுரம் கலைக்ககுழுவின் ஏற்பாட்டில் பௌர்ணமி தினக் கலை நிகழ்வும் நூல் வெளியீடு மற்றும் மதிப்பளித்தல் நிகழ்வும் கவிஞர் செ.ஞானராசா தலைமையில் நேற்று (17) திருகோணமலை அன்புவழிபுரம் அன்பு அறிவகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் எழுத்தாளர் சூசை எட்வேட் அவர்களின் 'இங்கு வீசியது ஒரு சமாதானக்காற்று' என்ற சிறு கதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டதுடன் நூலின் முதல் பிரதியை பெற்றவர் அருட்தந்தை சூ.டக்ளஸ் ஜேம்ஸ் பங்குத் தந்தை அன்புவழிபுரம் அவர்கள்.நூல் மதிப்பீட்டை செய்தவர் நீங்களும் எழுதலாம் ஆசிரியர் எஸ்.ஆர். தனபாலசிங்கம் அதனை தொடர்ந்து நூலாசிரியர் எழுததாளர் இராஜேஸ்வரனால் மதிப்பளிக்கபட்டார் .

அதனைத் தொடர்ந்து இலக்கிய ஆர்வலர் ஓய்வு பெற்ற அதிபர் சரோசா இராமநாதன் அவர்கள் பிரதி அதிபர் ஞானராசா சுகிலா அவர்களால் மதிப்பளித்து பாராட்டப்படடார். அதனைத் தொடரந்து வரலாற்று ஆய்வாளர் கலாநிதி க.சரவணபவன் அவர்களின் படைப்பாக்கம் பற்றிய மீள் பார்வை இடம் பெற்றது.தொடரந்து அன்புவழிபுரம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் து. தனராஜ் அவர்களினால் மாணவர்கள் , இளைஞர் படைப்பாக்கம் வாசிப்பு பற்றிய கலந்துரையாடல் உரையுடன் நூல்கள் பகிர்ந்தளிப்பும் இடம் பெற்றது.






Powered by Blogger.