திருமலையில் எரிபொருள் கேட்டு வீதியை மறித்து சாரதிகள்...
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி வீதியில் அமைந்துள்ள திருகோணமலை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக டீசல் வழங்குமாறு கோரி சாரதிகள் வீதிக்கு இறங்கி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்
குறித்த எரிபொருள் நிலையத்தில் இன்று (17) இரவு 7.45 மணியளவில் டீசல் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்துள்ள நிலையில் கேன்களில் டீசல் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த சாரதிகளுக்கு கொள்கலன்களில் டீசல் வழங்கமுடியாது என குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து சாரதிகள் வீதிக்கு இறங்கி பிரதான வீதியை மறித்து டீசலை வழங்குமாறு கோரிக்கை ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்
இதன்போது பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து திருகோணமலை தலைமையக போலீசாரின் தலையீட்டில் எரிபொருள் நிலைய முகாமையாளர் உடன் கலந்துரையாடி டீசல் விநியோகம் மீண்டும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது
இருப்பினும் குறித்த வீதியில் தொடர்ந்தும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் டீசல் கொள்வனவு செய்ய வருபவர்களுக்கு ஒருவருக்கு ஒரு கேன்களில் மாத்திரமே டீசல் விநியோகிப்பதாககவும் வாகன சாரதிகள் தெரிவித்தனர்
இருப்பினும் குறித்த எரிபொருள் நிலையத்தில் மற்றுமல்லாது திருகோணமலை நகரில் பெரும்பாலான எரிபொருள் நிலையத்தில் நீண்ட வரிசையில் பெட்ரோல் நிரப்புவதற்காக காத்து இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.