ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரச எதிர்ப்பு பேரணியினை நடத்த தீர்மானம்...
-அபூ நுபைல்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் எதிர்வரும் முதலாம் திகதி அம்பாறை மாவட்டத்தில் அரச எதிர்ப்பு பேரணியினை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான சாதக பாதக அம்சங்கள் பேசப்பட்டு வந்தாலும் உண்மையிலேயே அக்கட்சிக்கு தனது ஆதரவாளர்களை தக்கவைக்க வேண்டிய கட்டாய தேவை உள்ளது.
மேலும் மக்கள் மத்தியில் உள்ள அரச எதிர்ப்பு மனோபாவத்தை சாதகமாக பயன்படுத்தவேண்டிய சாணக்கியமும் தேவைப்படுகின்றது.
தலைவர் ஒருபுறமும் அக்கட்சியின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு திசையிலும் பயணிப்பதை எதிர்ப்பின் மூலமாக தனது பலத்தை காட்டவேண்டிய பொறுப்பு தலைவரை சார்ந்துள்ளது.
மக்கள் வாக்களிப்பது மரக்கட்சிக்கே அன்றி அதில் உள்ள வேட்பாளர்களுக்கு அல்ல. என்னும் பாடத்தை அடுத்தவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவையும் தலைவருக்கு உண்டு.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு மக்களை வைத்து ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்னும் வெஞ்சினமும் தலைவருக்கு உண்டு.
இவைகள்தான் அரசு எதிர்ப்பு பேரணியில் பின்னணி என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன...??
