Header Ads

Breaking News
recent

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நடாத்திய "அடிப்படை ஊடக கல்வியறிவு மற்றும் உண்மை சரிபார்ப்பு" தொடர்பான இலவச பயிற்சிப் பட்டறை வவுனியாவில் இடம்பெற்றது...



அலுவலக செய்தியாளர் ஹமீட் முஹமட் சஜாத்

நாடளாவிய ரீதியில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் "அடிப்படை ஊடக கல்வியறிவு மற்றும் உண்மை சரிபார்ப்பு" தொடர்பான இலவச பயிற்சிப் பட்டறை நடாத்தி வருகின்றது

அந்த வகையில் இன்றைய தினம் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பயிற்சிப்பட்டறை வவுனியா ஓவியா ஹோட்டலில் இடம்பெற்றது

காலை 09:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளராக "விடி வெள்ளி" பத்திரிகையின் ஆசிரியர் எம்.பைருஸ் கலந்து சிறப்பித்தார் 


அத்தோடு இப்பயிற்சி பட்டறையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் என பலரும் பங்கேற்றனர்


பங்கேற்ற அனைவருக்கும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் சான்றிதழ் வழங்கப்பட்டதோடு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது







Powered by Blogger.