திருமலை ஊடகவியலாளர் சங்கத்தின் வழிகாட்டலில் இடம்பெற்ற ஊடக செயலமர்வு..
ADMIN
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் வழிகாட்டலில் ஒருநாள் ஊடக செயலமர்வு ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றது
நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மல்லிகா விடுதியில் மேக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டு இவ் இலவச ஒருநாள் ஊடக செயலமர்வு இடம்பெற்றது
இவ் ஊடக செயலமர்வில் வளவாளராக சர்வதேச தேசிய விருது வென்ற தொலைக்காட்சி தயாரிப்பாளரும், தொகுப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ஜே. பிஸ்பிரின் முஹம்மத் அவர்கள் கலந்துகொண்டதுடன்
குறித்த செயலமர்வில் 30 ற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியதுடன் இவ் ஊடாக செயலமர்வில் செய்தி என்றால் என்ன? செய்தி தயாரித்தல்? செய்தி வாசித்தல்? போன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவு படுத்தப்பட்டதுடன் அதற்கான பயிற்சியும் வழங்கிவைக்கப்பட்டது
மேலும் இவ் ஒரு நாள் இலவச ஊடக செயலமர்வில் கலந்துகொண்டு செய்தி வாசித்தல் மற்றும் செய்தி தயாரித்தல் போன்ற துறைகளில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்திய நபர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பங்குபற்றியவர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் மேக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் பிரதம செய்தியாசிரியருமான எம்.எப்.மஹீஷா,மேக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பின் இயக்குனர் குழுவின் ஆலோசகரும் ஊடகவியலாளருமான ரவ்பீக் பாயிஸ், மேக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பின் இயக்குனர் குழு உறுப்பினரும் செய்தி வாசிப்பாளர் ஊடகவியலாளருமான ஹமீத் முகமத் சஜாத், மேக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பின் இயக்குனர் குழு உறுப்பினரும் நிர்வாக இயக்குநருமான தில்சானா இக்ரம், மேக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பின் இயக்குனர் குழு உறுப்பினரும் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா சயானா, மேக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பின் இயக்குனர் குழு உறுப்பினரும் சர்வதேச செய்தியாளருமான அப்துல் அஸீஸ் இக்ரம், மேக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பின் அலுவலக செய்தியாளர் எம்.எம்.முகஸ்ஸிர்,மேக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பின் அலுவலக செய்தியாளர் எம்.எப்.நதீர், மேக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பின் நிறைவேற்று அதிகாரியும் அலுவலக செய்தியாளரும் செய்தி வாசிப்பாளருமான நூஹுதீன் நசீம், மேக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பின் அலுவலக செய்தி வாசிப்பாளர்களான சம்ஸாத் பேகம்,ஜெஸ்ரா ஜெஸ்மீன், வலையமைப்பின் உயரதிகாரிகள்,பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வடமலை ராஜ்குமார், சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.