Header Ads

Breaking News
recent

இ.போ.ச பஸ்ஸை முந்த முயற்சித்த தனியார் பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் இருவர் பலி. பலர் காயம்...

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

யாழ்ப்பாணம் – முல்லைத்தீவுக்கிடையில் பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் 40இற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 21பேர்  காயமடைந்துள்ளதுடன் 4 பேர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை குறித்த தனியார் பேருந்து முந்தி செல்ல முற்பட்ட போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது   




Powered by Blogger.