Header Ads

Breaking News
recent

பிரதமரை வரவேற்க கட்டப்பட்டிருந்த பதாகைகளை கிழித்து போராட்டம்...


யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (19) வருகை தந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்றைய(20) தினம் மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்க்காக வருகை தருவதை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

இந்நிலையில் குறித்த ஆர்பாட்டத்தினை தடுக்கும் நோக்கில் பொலிசாரினால் தடுக்கப்பட்டது

மேலும் பிரதமர் செல்லும் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் வருகைதந்த வாகனத்தை விட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை இறங்க அனுமதி வழங்கப்படவில்லை

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் குறித்த வீதியால் பயணித்ததன் பின்னர் வாகனத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர்களை செல்ல பொலிசார் அனுமதித்ததையடுத்து காணாமல்ஆக்கப்பட்டஉறவுகளின் உறவினர்கள் பிரதமரை வரவேற்பதற்காக கட்டப்பட்டிருந்த பதாகைகளை கிழித்தும் எரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.