Header Ads

Breaking News
recent

அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் : மாவட்ட மட்ட அஹதியா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பும் - படங்கள் இணைப்பு




ரவ்பீக் பாயிஸ்,எம்.எம்.முபஸ்ஸிர்,எம்.எப்.நதிர்
திருகோணமலை மட்கோ அல்-ஹூசைனிய்யா அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் திருகோணமலை மாவட்ட மட்டத்தில் அஹதியா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது


மட்கோ அல்-ஹூசைனிய்யா ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் இன்று (26) பிற்பகல் குறித்த பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு விழாவும் அல்-ஹூசைனிய்யா அஹதியா பாடசாலையின் தலைவர் ஏ.சி.எம்.நசீர் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது


குறித்த விழாவில் விசேட அதிதிகளாக திருகோணமலை மாவட்ட இஸ்லாமிய கலாச்சார உத்தியோகத்தர் சிபானி, திருகோணமலை மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் தலைவர் மௌலவி. வை. எம். ஹதியத்துல்லாஹ், திருகோணமலை அல்-மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் அஷ்-ஷெய்ஹ்.அலாவுதீன்,முன்னாள் அதிபரும் தோப்பூர் ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவருமான எஸ்.டி.எம்.நளீம் நூழாரி, மாட்கோ கிராம உத்தியோகத்தர் எல்.ஜி.எல்.காஞ்சனா,அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.லோஜினி மற்றும் அல் - ஹூசைனிய்யா பள்ளிவாசல் தலைவர் ரியாழ் ரகுமான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்


மேலும் திருகோணமலை மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட அஹதியா மாணவர்கள் பங்கு பற்றிய மாவட்ட மட்ட அஹதியா போட்டியில் அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலாம் இடத்தை வென்ற எம்.கே.மின்ஹா,துஆ மனனப்போட்டியில் முதலாம் இடம் வென்ற ஓ.எம். முர்ஷிதா மற்றும் மாவட்ட மட்ட அஹதியா போட்டியில் இஸ்லாமிய வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடம் வென்ற எம்.ஆர்.ஏ.இலாஹ், அல்குர்ஆன் மனனப் போட்டியில் மூன்றாமிடம் வென்ற ஆர்.எம்.ஹபீஸ் மற்றும் ஹதீஸ் மனனப் போட்டியில் மூன்றாமிடம் வென்ற எம்.எப்.எம்.அதீக் ஆகியோர் திருகோணமலை மாவட்ட இஸ்லாமிய கலாசார உத்தியோகத்தர் சிபானி அவர்களினால் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.


மேலும் மாவட்ட ரீதியாக இடம்பெற்ற அஹதியா பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் கதை கூறல் போட்டியில் முதலாம் இடம் வென்ற ஒ.எம்.முர்ஷிதா, இஸ்லாமிய கீதம் போட்டியில் முதலாம் இடம் பிடித்த எம்.கே.இல்மான்,இஸ்லாமிய வினா விடைப் போட்டியில் முதலாம் இடம் வென்ற எம்.கே.மின்ஹா, இஸ்லாமிய வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடம் வென்ற எம்.எம்.எப்.முஷர்ரிபா மற்றும் அரபு எழுத்தணி போட்டியில் இரண்டாம் இடம் வென்று சாதனை படைத்த எஸ்.எம்.சகிப் ஆகியோர் கிராம உத்தியோகத்தர் எல்.ஜி.எல்.காஞ்சனா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.லோஜினி அகியேர்களினால் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்



மேலும் குறித்த பரிசளிப்பு விழாவில் அல்-ஹூசைனிய்யா அஹதியா பாடசாலையின் பாடசாலை மட்டத்தில் பல போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்காட்டிய பல மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்


குறித்த பரிசளிப்பு விழாவில் குறித்த அஹதியா பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள்,பிரதேச சங்கங்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் பெருமளவிலான பிரதேசவாசிகள் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.























Powered by Blogger.