பெரும்பான்மையை இழக்குமா அரசாங்கம்?
நாடாளுமன்றத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் தனிப்பெரும்பான்மையை இழப்பதற்கு 3 ஆசனங்கள் மாத்திரமே வித்தியாசம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 11 கட்சிகளின் கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன அனைத்தும் நேர்மையுடன் செயற்படுமாயின் அரசாங்கம் தனிப்பெரும்பான்மையை இழக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது பாரியளவிலான கூட்டணி மற்றும் ஒருமித்த கருத்துகள் தேவைப்படுவதாகவும், கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது அவசியமெனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட நபர்களை ஒன்றிணைப்பது மிகவும் கடினமாகுமெனவும், அவ்வாறான ஒன்றிணைவு தற்போது நாட்டுக்கு அவசியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)