மக்கள் எழுச்சிகளின் ஊடாக இந்த அரசை வெளியேற்றுவதற்காக மக்கள் ஒன்று திரண்டுளளனர் : மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் அருன் தெரிவிப்பு...
திருகோணமலை துறைமுகத்தை பாதுகாக்கவும் தொழிலாளர்களது உரிமைகளை வென்றெடுக்கவும் அணிதிரள்வோம்.! எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை துறைமுகக் கிளையின் மீழ் ஒருங்கமைத்தல் கூட்டம் இன்று (22) திருகோணமலை துறைமுக அதிகார சபையில் இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும்் சட்டமானியுமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும்் சட்டமானியுமான அருண் ஹேமச்சந்திரா
தமிழ் அரசியல் தலைமைகளை பொருத்தவரை அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக இந்தியாவை நாடிவருவதன் காரணமாக தொடர்ச்சியாக நாட்டின் சொத்துக்களை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், எனவும் இதுவரை எந்த விதமான தீர்வும் கிடைக்கப் பெறவில்லை மாறாக நமது நாட்டின் சொத்துக்களை நாம் இழந்த வண்ணமே இருக்கிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும்் சட்டமானியுமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
மேலும் ஒரு நாடு எதிர்நோக்க வேண்டிய அனைத்து விதமான மோசமான நிலையினையும் இப்பொழுது நாங்கள் தினம் தினம் எதிர்நோக்கி வருகின்றோம் எனவுும் இதுவரைகலமும் இல்லாதவாறு வரிசையில் நிற்கும் கலாச்சாரம் பொதுமக்களிடம் தினம் தினம் நீடித்த வண்ணம் உள்ளதாாகவும் சுட்டிக்காட்டிய மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்
அரசானது ஆட்சிப்பீடம் ஏற முன்னர் இந்த நாட்டில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான ஒரு நாட்டை உருவாக்குவோம் எனவும், தேசிய சொத்துக்களை விற்க போவதில்லை அவ்வாறு விற்கப்பட்டவற்றை தாம் மீட்டெடுப்போம் எனவும் மார் தட்டி கூறியிருந்தது.
ஆனால் தற்போது ஆட்சியை தனதாக்கிக் கொண்ட ஒரு சில மாதங்களில் நாட்டினை கூறுபோட்டு விற்கும் செயற்திட்டம் இந்த அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையே நிதர்சனம்
மேலும் இன்றைய நிலையின் படி இலங்கையில் வசிக்கின்ற ஒரு தனிநபரது கடன் தொகையானது 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக காணப்படுகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும்் சட்டமானியுமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்
இதன் காரணமாக இந்த ஆட்சியாளர்களை மேடையேற்றிய அதே பொதுமக்கள் ஒன்று திரண்டு பாரிய மக்கள் எழுச்சிகளின் ஊடாக அவர்களை வெளியேற்றுவதற்காக ஒன்று திரண்டுளளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும்் சட்டமானியுமான அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார்.




