Header Ads

Breaking News
recent

28 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்திற்கு பலர் ஆதரவு...



நாட்டின் அனைத்து வர்த்தக வலயங்களிலும் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் பணியாளர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் நடவடிக்கையின் போதும் குறித்த தொழிலாளர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்‌ஷ பரம்பரையினரை வீட்டுக்கு அனுப்புவதற்காக நாட்டு மக்கள் வீதிக்கு இறங்கியுள்ள நிலையில், உழைக்கும் மக்களாகிய நாம் அத்தகைய தலைவர்களின் கீழ் வாழ விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக, வாழ்க்கைச் செலவினை எதிர்கொள்வதற்கு போதுமான ஊதியம் இன்றி தாம் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய ஊடக மையத்தின் ஏற்பாட்டாளர் காமினி ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு எதிர்வரும் 28 ம் திகதி நடைபெறுகின்ற போராட்டத்தில் மலையக கட்சிகளும் இணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று அட்டனில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.