நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அமைதியான மற்றும் கண்ணியமான சமூக இயக்கத்தை மலிபன் பாராட்டி ஆதரிக்கிறது.
இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் இக்கட்டான காலங்களை கடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக செழித்தோங்கியிருக்கும் உண்மையான இலங்கை வர்த்தக நிறுவனமாக மலிபன், தற்போதைய நிலையற்ற பொருளாதார நிலைமை காரணமாக அனைத்து இலங்கையர்களும் அனுபவிக்கும் பாரிய இன்னல்களைக் கண்டு மிகவும் விசனமடைந்துள்ளது.
100 வீதம் உள்ளுர் நிறுவனமான மலிபன், பரஸ்பர விழுமியங்களை மதிக்கும், மிகவும் அமைதியான கொள்கையை பின்பற்றி, முழு இலங்கை மக்களையும் ஒன்றிணைத்து, தேசத்தின் எதிர்காலத்தை நம்பும் பெருமைமிக்க இலங்கை இளைஞர்களின் இந்த புகழ்பெற்ற முயற்சியை பணிவுடன் பாராட்டுவதாக அறிவித்துள்ளது
தொடர்ந்தும் மலிபன் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த ஒன்றுபட்ட எழுச்சியானது நிச்சயமற்ற எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளை ஒளிரச் செய்கிறது எனவும்
கடந்த காலங்களில் பல சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொண்ட நாடு என்ற வகையில், இந்த பொருளாதார நிச்சயமற்ற நிலைகளினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது எனவும்
அதற்கிணங்க, நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் திறன்களின் அடிப்படையில் அரசியல் மற்றும் சமூக அமைப்பை உருவாக்கத் தொடங்கப்பட்டுள்ள அமைதியான மற்றும் கண்ணியமான சமூக இயக்கங்களை மலிபன் பாராட்டி ஆதரிக்கிறது எனவு அவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

