ரூ. 620 கோடி பெறுமதியான 325 கி.கி. போதைப்பொருட்களுடன் 11 பேர் கைது
.jpeg)
காலி, தொடந்துவ கடற்பகுதியில் நேற்றைய தினம் (12) இலங்கை கடற்படை ,இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களம் ,அரச புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து விசேட நடவடிக்கை மேற்க்கொண்ட போது இலங்கை படகொன்றில் இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 620 கோடி ரூபா பெறுமதியான 300 கி.கி. ஹெரோயின் மற்றும் 25 கி.கி. ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இதன்போது இலங்கையின் பல நாள் மீன்பிடி இழுவை படகொன்றையும் குறித்த சம்பத்துடன் தொடர்புடைய ஒரு டிங்கி படகு, ஒரு கெப் வாகனம், முச்சக்கர வண்டி ஒன்று ஆகியவற்றை கைப்பற்றியுள்ள இலங்கை கடற்படையினர், சம்பவத்துடன் தொடர்புடைய 11 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
.jpeg)

.jpeg)
