சுபகிருது வருடப்பிறப்பு சுப நேரங்கள்

2022 ஆம் ஆண்டு 14 ஆம் திகதி வியாழக்கிழமை நாளை காலை 8.00 மணி 41 நிமிடத்தில் “சுபகிருது” வருடம் பிறக்கிறது. சுபகிருது என்றால் அதிக நன்மைகள் நிறைந்த ஆண்டு என்று பொருள்.
நாளை காலை 7.57 மணி முதல் காலை 9.51 மணி வரையும் மற்றும் மறுநாள் நாள் 15 ஆம் திகதி காலை 9 மணி 51 நிமிடம் வரையும் மருத்து நீர் வைக்கும் நேரமாக கணிக்கபட்டுள்ளது.
இந்த வருட பிறப்பின் பவள புஸ்பரகம் கொண்ட ஆபரணங்கள், கடும் சிவப்பு அல்லது மஞ்சள் நிறப்பட்டு ஆடை அல்லது சிவப்பு கரை அமைந்த புத்தாடை அணியலாம்.
வியாபாரம் அல்லது புது கணக்கு ஆரம்பிப்பவர்கள் வைகாசி மாதம் (மே மாதம்) 11 ஆம் திகதி புதன் கிழமை காலை 6.10 மணி முதல் காலை 7.20 மணி வரையிலும், 13 ஆம் திகதி வெள்ளிகிழமை காலை 06.03 தொடக்கம் காலை 08.03 மணி வரைக்கும் ஆரம்பிப்பது சிறந்தது.