Header Ads

Breaking News
recent

சிங்கள பௌத்த ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாகப் 8 இஸ்லாமியர்கள் உயிர் தியாகம் செய்திருப்பார்கள் ? கமல் குணரத்ன கேள்வி...


சிங்கள பௌத்த ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக்க இஸ்லாமியர்கள் 8 பேர் உயிர் தியாகம் செய்திருப்பார்கள் என நம்ப இயலுமா என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன கேள்வி எழுப்பினார்.

இன்று இடம்பெற்ற மாநட்டில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அவர்களில் 196 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 81 பேர் மீது பல்வேறு மேல் நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் 29 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கமல் குணரத்ன தெரிவித்தார்.

மேலும், 79 பேருக்கு எதிராக 25,653 குற்றச்சாட்டுக்களின் கீழ் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.