Header Ads

Breaking News
recent

நோன்புப் பெருநாளை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை...



ஏப்ரல் 30 சனிக்கிழமை தொடங்கி மே 6 வெள்ளி வரை ஈத் அல் பித்ர் விடுமுறையை ஒரு வாரத்திற்கு நீட்டிக்கும் முடிவுக்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி அரசு துறைக்கு 9 நாட்கள் விடுமுறை:

அமைச்சரவை முடிவுக்கு இணங்க, அபுதாபி, துபாய், ஷார்ஜா, ராசல் கைமா, அஜ்மான் மற்றும் உம்முல் குவைன் ஆகிய எமிரேட்டுகள் 9 நாள் விடுமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் தனியார் துறைக்கு 5 நாட்கள் விடுமுறை:

ஈத் அல் பித்ர் முன்னிட்டு 29 ரமலான் முதல் 1443 ஷவ்வால் 3 வரை தனியார் துறையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.



அமீரகத்தில் உள்ள தனியார் ஊழியர்களுக்கு சனி (ஏப்ரல் 30), ஞாயிறு (மே 1), திங்கள் (மே 2), செவ்வாய் (மே 3) மற்றும் புதன் (மே 4) உள்ளிட்ட ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.