Header Ads

Breaking News
recent

றம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில், ஒருவர் பலியானார்.


இந்த மோதலில் 10 பேர் காயமடைந்த நிலையில், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் எமது செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தினார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டி - கொழும்பு தொடருந்து மார்கத்தை றம்புக்கனை

பகுதியில் மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க றம்புக்கனை காவல்துறை கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை ஊடக பேச்சாளர் கூறுகையில், காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டபோது, ஆர்ப்பாட்டகாரர்கள் காவல்துறையினரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சிலர் காயமடைந்துள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதல் காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
Powered by Blogger.