Header Ads

Breaking News
recent

புதிதாக மேலும் 3 சிறுபான்மை இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு..!


புதிய அமைச்சரவை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

அதற்கமைய, புதிதாக 17 அமைச்சர்களும், 24 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், இன்றைய தினம் மேலும் சில இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களின் விபரங்கள்

நெசவுக் கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக முஷாரப் நியமனம்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமனம்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நியமனம்.


Powered by Blogger.