“மகா சங்கரத்ணய” உயர் பீட பிக்குகளும் இணைந்தனர் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில்

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு மேலும் வலு சேர்ப்பதற்காக “மகா சங்கரத்ணய” உயர் பீட பிக்குகளும் இன்று போராட்ட களத்தில் இணைந்துள்ளனர்.