Header Ads

Breaking News
recent

திருமலையில் நினைவு கூறப்பட்ட ஈஸ்டர் தின பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி..



ரவ்பீக் பாயிஸ் 
ஈஸ்டர் தின பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (21) திருகோணமலையில் அனுஸ்டிக்கப்பட்டது. 

திருகோணமலையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவு மண்டபத்துக்கு முன்பாக மாலை 6 மணி அளவில் திருகோணமலை மாவட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்களின் பங்குபற்றலுடன் மனப்பூர்வமான இதய அஞ்சலி செலுத்தப்பட்டது

ஒரு சிலரின் சுயலாபத்திற்காக வம்  அரசியல் நோக்கத்திற்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தின பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் அப்பாவி சிறுவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட உயிர்களை பலி எடுத்து பலர் காயமுற்று இன்றுவரை அழியா சுவடுகவும்  இதுவரை நீதி கிடைக்காத நிலையில் காலம் தாழ்த்தி செல்வதாகவும் ஈஸ்டர் பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் கைது செய்யப்பட்ட பலர் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போதிலும் மக்களை ஏமாற்றி இவ்வாறு நடந்து கொள்ளும் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம் எனவும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார் 

இன்றைய ஈஸ்டர் தின பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் மெழுகுவர்த்தி ஏற்றி சமயத் தலைவர்களின் பங்குபற்றலுடன் விசேட பிரார்த்தனைகளும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.














Powered by Blogger.