Header Ads

Breaking News
recent

புதைக்கப்பட்ட நிலையில் திருமலையில் கைக்குண்டு ஒன்று மீட்பு...



ரவ்பீக் பாயிஸ் 

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர் 

இன்று (11) அதிகாலை குறித்த கைக்கொண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது... 

குறித்த கைக்கொண்டு மீட்கப்பட்ட காணி உரிமையாளர் வடிகான் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து குறித்த கைக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பின்னர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த கைக்குண்டு செயலிழப்பு செய்வதற்காக திருகோணமலை சர்தாபுர விசேட அதிரடிப் படையினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Powered by Blogger.