Header Ads

Breaking News
recent

கேஸ் கேட்டு பிரதான வீதியை மறித்து வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் : நடு வீதியில் நோன்பு திறந்த நோன்பாளிகள்...



ரவ்பீக் பாயிஸ் 

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் சமையல் எரிவாயு பெற்றுத் தருமாறு கோரி வீதியை மறித்து வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர் 

இன்று (11) காலை முதல் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்னர் சமையல் எரிவாயு தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து வாடிக்கையாளர்கள் திருகோணமலை நகரின் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற வீதியை மறித்து சமையல் எரிவாயு வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதை அடுத்து திருகோணமலை நகரசபை உறுப்பினர் ஒருவரினால் இன்றைய தினம் நகரின் பெரும்பாலான பிரதேசங்களில் வீடுகளுக்கு சென்று சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டதாகவும்  இவ்வாறு குறிப்பிட்ட பிரதேசங்களில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வனால் வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் சமையல் எரிவாயு கிடைக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர் 

மேலும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தை ஒட்டி இவ்வாறு சமையல் எரிவாயு உட்பட ஏனைய பொருட்களுக்கும் வரிசையில் காத்திருந்து பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோன்பு காலங்களில் சமைப்பதற்கு கூட மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு இல்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் விசனம் தெரிவிக்கின்றனர் 

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் மறைக்கப்பட்ட வீதி நடுவிலிருந்து இன்றைய நோன்பினை திறந்தமையும் குறிப்பிடத்தக்கது.










Powered by Blogger.