முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்தில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி...
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த விபத்து இன்று (22) பிற்பகல் திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது..
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
முச்சக்கர வண்டி வந்த பாதையில் இருந்து வலப்புறப்பக்கமாக திரும்புவதற்காக திருப்பப்பட்ட போது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சிசிடிவி காணொளி மூலம் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




