உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு....
திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது இன்று (26) பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து இடம் பெற்றது. பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வானது சர்வோதய நிறுவனம்,ஹேமாஸ் டயலொக் நிறுவனங்கள் இணைந்து சுமார் 2500 ரூபா பெறுமதியான 50 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு இலட்சம் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் விசேட தேவையுடோயோர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சர்வோதய நிலைய வடகிழக்கு பணிப்பாளர் வீ.ஜீவராஜ், டயலொக் நிறுவன பிராந்திய முகாமையாளர், சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.


