Header Ads

Breaking News
recent

ஜனாதிபதியை சந்தித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்



இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (04) பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) வேண்டுகோளுக்கு இணங்க மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் திட்டம், தோட்டத் தொழிலாளிக்கு நாளாந்த சம்பளம் 1000 ரூபா வழங்குதல், ஆசிரியர் உதவியாளர் நியமனங்கள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் இராமேஸ்வரன் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.