முன்னாள் LTTE உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரால் வீட்டுத்திட்டம்
'தலைக்கு நிழல்' திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் ஜே/246 கிராமசேவகர் பிரிவின் மயிலிட்டி வடக்கு பிரதேசத்தில் வசிக்கின்ற புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினரான ராசவல்லன் தபோரூபன் அவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய இல்லமானது கையளிக்கும் நிகழ்விற்காக பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜென்ரல் சவேந்திர சில்வா வீடியோ தொழில்நுட்பம் மூலம் கலந்துகொண்டிருந்தார் புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தார்.
நேற்றையதினம் யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபாவினால் குறித்த வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த இல்லம் அமைப்பதற்கான பூரணநிதி அனுசரணையினை விஸ் நடராஜா வழங்கியிருந்ததுடன் 515 ஆவது காலாட் படைப்பிரிவின் படைத்தளபதியின் நெறிப்படுத்தலின் கீழ் 10ஆவது இலங்கை இராணுவ எறிகணைப் படையணியினரின் சரீர ஒத்துழைப்பின் மூலம் வீட்டின் நிர்மாணப் பணியானது மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது வீட்டிற்கு தேவையான உபகரணங்கள், உலர் உணவுப் பொதிகள் என்பனவும் கட்டளைத் தளபதியினால்; வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 55ஆவது காலாட் படைப்பிரிவின் சேனாதிபதி, காலாட் படைப்பிரிவின் படைத்தளபதிகள், யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் நிர்வாக பொறுப்பதிகாரி, நன்கொடையாளர் விஸ் நடராஜா, இராணுவ உயரதிகாரிகள், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் உட்பட குறிப்பிட்ட அளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.
