Header Ads

Breaking News
recent

குச்சவெளி பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்பு...



ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


குச்சவெளி அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள மைதானத்தில் இன்று (25) குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...


அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தின் மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது புதைக்கப்பட்ட நிலையில் குறித்த கைக்குண்டினை கண்டதாகவும் குறித்த சிறுவர்கள் கைக்குண்டு என்று தெரியாமல் அதனை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் பின்னர் பிரதேச வாசிகள் குச்சவெளி பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த கைக்குண்டு மீட்பதற்கான ஏற்பாடுகளை குற்றவாளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


மேலும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த கைக்குண்டினை செயலிழக்க செய்வதற்காக விசேட அதிரடிப் படையினருக்கு தகவல்கள் வழங்கியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.