திருகோணமலை முத்துநகர் மையவாடி வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு...
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை முத்துநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள மையவாடி வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த கிராமத்தில் மழைகாலங்களில் ஜனாஸாக்களை (இறந்த உடல்களை) அடக்கம் செய்வதற்காக குறித்த மையவாடிக்கு வாய்க்காலில் இரங்கி நீரினை கடந்து உடல்களை பல சிரமத்துடன் சென்று அடக்கம் செய்து வருவதாகவும்.
முத்துநகர் மையவாடி வீதிக்கு இரண்டு ஹிவும் பைப் வைத்து சுமார் 80 மீட்டர் வீதியினை செப்பனிட்டு தருமாறும் அப்பகுதி பள்ளிவாயல் நிர்வாகம் மற்றும் சங்கங்கள் பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களிடம் எழுத்து மூல கோரிக்கையின் மூலம் அறிவிிிக்கப்பட்டதையடுத்து.
அவ்வீதியினை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் பட்டினமும் சூழலும் பிரதேச சபை அனுசரணையுடன் அப் பகுதி சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மையவாடி வீதி அபிவிருத்தி செய்து கௌரவ உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களினால் இன்று (25) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இதன் போது முத்துநகர் கிராமத்தில் உள்ள சங்கங்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.






