Header Ads

Breaking News
recent

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருமலையில் சுதந்திரக் கட்சியினரினால் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பு...



ரவ்பீக் பாயிஸ் 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கிரிஷாந்தன் அவர்களின் தலைமையில்
அரசியல் நிலைமையை சரியான முறையில் நிறுவங்கள் எனும் தொனிப்பொருளில் திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (01) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது


குறித்த ஆர்ப்பாட்டத்தில் இன்று உலகளாவிய ரீதியில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் நாட்டில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமையை வென்றெடுக்கும் சந்தர்ப்பம் இதுவரை கிடைக்கவில்லை எனவும் மக்களின் ஆணையை ஏற்று ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியாளர்கள் மக்களின் ஆணை படி ஜனாதிபதி உட்பட புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் என அனைவரும் தமது பதவிகளை ராஜினாமா செய்து வீடு செல்ல வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது


குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக குறை, தோல்வியடைந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், 21ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்து,அத்தியாவசிய உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்கு, உயிர் தரும் மருந்து தட்டுப்பாடுகளுக்கு உடனடி தீர்வு காண் மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உடனடியாக பதவி விலகு என்ற பதாதைகளை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்


குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கிரிசந்த இவ்வாறு கருத்து தெரிவித்தார்


குறித்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமல்லாது நாடு பூராகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுகினறது கடந்த நாட்களில் எமது கட்சியின் தலைமைகளும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் மக்களின் நிலை நிலைப்பாடன ராஜபக்ச குடும்பத்தினர் வீடு செல்ல வேண்டும் என்பதே எமது குறிக்கோளாகவும் அதுவே இருக்கிறது எனவே மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து ராஜபக்ச குடும்பத்தினர் உடனடியாக தமது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்


மேலும் குறித்த அரசு முஸ்லிம் மக்கள் மீது வீணான பழிகளை சுமத்தி முஸ்லிம்களை கேவலப்படுத்தி முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்து பள்ளிகளை உடைத்து நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்த தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையில் இனவாதத்தை விதைத்து ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி தற்போது அதே மக்களினால் ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது


எனவே இவ்விடத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றியையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும் காரணம் பிளவுபட்டு குரோதங்களுடன் வாழ்ந்து வந்த தமிழ்,முஸ்லிம் சிங்கள மக்களை இத்தருணத்தில் இன மத மொழி இனவாத கருத்துக்கள் இன்றி ஒன்றுசேர்த்தமைக்காக


எனவே தற்போது ஆட்சியாளர்களுக்கு மக்கள் மன்றத்தில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது ஆட்சி அதிகாரங்களை கையளித்து விட்டு வீடு செல்ல வேண்டுமென்று எனவே குறித்து அரசாங்கம் மக்களின் தீர்ப்பை ஏற்று உடன் அரசாங்கத்திலிருந்து விலகி வீடு செல்லுமாறு திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் விவகார அமைப்பாளர் ரியாஸ் தீன் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்


மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் அமைப்பாளர் சட்டத்தரணி பாயிஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நளீன் குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாவட்டத்தின் பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















Powered by Blogger.