Header Ads

Breaking News
recent

'தியாகத்தீயில்' எனும் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா...



ரவ்பீக் பாயிஸ் 
விபுலானந்தர் இணையக் கல்விக்கழகத்தின் எற்பாட்டில் மயில் மகாலிங்கம் எழுதிய 'தியாகத்தீயில்' எனும் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா திருகோணமலை தி.தி.இ.கி.ச.கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஆரம்பப் பிரிவு மண்டபத்தில் நேற்று (30) மாலை இடம் பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதி சதாசிவம் பவானந்தமம் அவர்களும் கௌரவ விருந்தினராக முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் மூதூர் கலாசார உத்தியோகத்தர் க.அன்பழகன்
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

இந்நிகழ்வினை விபுலானந்தா கல்லூரியின் அதிபர் றெமன்சோதி ஜெறோம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நூலினை நூலசிரியரின் சகோதரர் ம.உதயகுமார் வெளிட்டு வைக்க முதல் பிரதியை நல்லதம்பி துரைராஜா ரகுராம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


தொடரந்து மூத்த இலக்கியவாதிகளான வேலாயுதம் தங்கராசா (தம்பலகாமம்) , அம்பலவானர் கௌரிதாசன் (தாமரைதாசன);,பேரம்பலம் கனகரெத்தினம் (ஷெல்லிதாசன்) , சோமநாதர் இராசேந்திரம் (தாமரைத்தீவான்) , சின்னத்துரை சுந்தரலிங்கம் (திருமலை சுந்தா) ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.