Header Ads

Breaking News
recent

அனைத்து பாடசாலைகளும் வழமைபோன்று நடைபெறும்...




நாளை காலை 6.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற நிலையில் வழமை போன்று பாடசாலைகளை நடத்துமாறு அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அரச பாடசாலை அதிபர்களுக்கு இதனை அறிவித்துள்ளனர்.

இதன்படி, நாளைய தினம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானம் அரச பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மாகாண கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
Powered by Blogger.