திருமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவும் ஞாபகார்த்த முத்திரை வெளியீடும்...
சேனையூர் நிருபர்
திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது தேசிய பாடசாலையான திருகோணமலை இ.கி.ச.ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி பாடசாலையின் அதிபர் செ.பத்மசீலன் தலைமையில் இன்று ஞாபகார்த்த முத்திரை (01) வெளியிடும் நிகழ்வு பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஆன்மீக விருந்தினராக இராமகிருஷ்ண மிஷன் கொழும்பு கிளையின்
உப தலைவர் சுவாமி அக்ஷ்ஷரானந்தா அவர்களும், பிரதம விருந்தினராக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். புள்ளநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக திருகோணமலை வலயகல்வி பணிப்பாளர் எஸ். சீறிதரன், திருக்கோணமலை மாவட்ட பிராந்திய தபால் அத்தியட்சகர் சி. அருட்செல்வம் மற்றும் முன்னாள் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பாடசாலை மாணவர்கள்,பழய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி பல வேலைத்திட்டங்கள் முன்னெடுத்து வருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது அந்த வகையில் இன்றைய தினம் கல்லூரியின் பிரதான வாயிலில் இருந்து ஆரம்பித்து கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு பாடசாலை வரை சைக்கிள் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டதுடன் குறித்த போட்டியில் கல்லூரியில் மாணவர்கள, பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது







