Header Ads

Breaking News
recent

3rd T20 : SLvsAUS - இலங்கை அணி அபார வெற்றி...



அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது இறுதியமான ரி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று (11) இரவு கண்டி, பல்லேகலையில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வோர்னர் 39 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டேனிஸ் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்‌ஷண 2 விக்கெட்டுகளையும், வணிந்து ஹசரங்க, பிரவீன் ஜயவிக்ரம தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதற்கமைய, 177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
Powered by Blogger.