Header Ads

Breaking News
recent

பாலத்திற்கு கீழ் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு...



மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரேந்து பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனது வீட்டிலிருந்து மாட்டிற்கு புல்வெட்டுவதற்கு பட்டிருப்பு பாலத்தின் ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்துள்ளவர் களுவாஞ்சிகுடி 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பேரின்பராசா பிரதீபன் (வயது-29) என அடையாளம் காணப்பட்டுள்ளது.


மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.













Powered by Blogger.