Header Ads

Breaking News
recent

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு 2வருட சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு



வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.


அமைச்சருக்கு 25 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் ஒரு தொழிலதிபரை தொலைபேசியில் மிரட்டி அவரிடம் ரூ.64 மில்லியன் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.


2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் ஃபரீக் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் 15 குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்தார்.


ஜெரார்ட் மெண்டிஸ் என்ற தொழிலதிபரை பணம் கேட்டு மிரட்டியதாக மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.


கொலன்னாவ மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள காணியில் உள்ள அனுமதியற்ற ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி மீண்டும் நிலத்தை நிரப்ப 64 மில்லியன் பணம் கேட்டு மிரட்டியதாகவே மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
Powered by Blogger.