Header Ads

Breaking News
recent

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி மேலும் ஒருவர் படுகாயம்....


அலுவலக செய்தியாளர்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (04) பிற்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஓமந்தை பகுதியில் பயணித்த பாரவூர்தி வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

மேலும் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மோதி அருகிலிருந்த வர்த்தக நிலையம் ஒன்றில் மோதிய நிலையில் நிறுத்தப்பட்டதாகமும் தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







Powered by Blogger.