குடாக்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்குத் நிரந்தர தீர்வு கிட்டியது...
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு உட்பட்ட சீனக்குடா குடாக்கரை மக்களின் நீண்டகால பிரச்சனையாக காணப்பட்டு குடிநீர் பிரச்சினை நிரந்தர தீர்வு கிடைத்தது.
அந்த வகையில் குடாக்கரை பகுதில் குடிநீர் உரிய நேரத்தில் சீராக கிடைக்காமையினால் அப்பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையிலும் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் மூலம் விநியோகிக்கப்படுகின்ற நீர் விநியோகம் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் வேகமாக வராமையினாலும் குறித்த வடிகாலமைப்பு சபையின் குடிநீர் வசதி தினந்தோறும் விநியோகிக்கப்படாமையினால் அப்பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்திருந்த நிலையில் அவர்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு கூடக்கரை பிரதேச பொதுமக்களும் அப்பகுதி சங்கங்களும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் முகமட் நௌபர் அவர்களிடம் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைத்ததையடுத்து நீண்டகால குடிநீர் பிரச்சினையாக காணப்பட்ட குறித்த குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு வழங்கப்பட்டது.
அப்பிரதேச மக்களின் குுடிநீர் பிரச்சனை நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் உப தவிசாளர் முகமட் நௌபர் அவர்களின் நேரடி தலையீட்டின் கீழ் குறித்த குடிநீர் பிரச்சனை தீர்வுக்கு ஒரு அங்கமாக குடாக்கரை பிரதேசத்தில் ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் திட்டம் மக்கள் பங்களிப்புடன் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆரம்பித்து வைத்து மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.


