Header Ads

Breaking News
recent

நாளை பாடசாலைகள் நடைபெறுமா? திருமலை வலயக்கல்வி பணிமனை விடுத்துள்ள விசேட அறிக்கை...

ரவ்பீக் பாயிஸ் 
திருகோணமலை வலயகல்வி பணிமணைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் வழமைபோல் நடைபெறும் என திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார். 

நாளைய தினம் கிழக்கில் பாடசாலைகள் நடைபெறுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்ததை அடுத்து கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைபோல் நடைபெறும் என அறிவித்ததை அடுத்து திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் குறித்த அறிவிப்பை விடுத்திருந்தார். 

மேலும் திருகோணமலை வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் நாளை முதல் தமது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை வழமைபோன்று முன்னெடுக்க முடியும் எனவும் போக்குவரத்து மற்றும் எரிபொருள் பிரச்சனை காரணமாக யாரேனும் ஒரு மாணவனுக்கு பாடசாலைக்கு சமூகம் அளிக்க முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் தமக்கு அருகில் உள்ள எந்த ஒரு பாடசாலைக்கும் சமூகமளித்து தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். 

இந்நிலையில் திருகோணமலை வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் போக்குவரத்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைக்கு கற்றல் செயற்பாடுகளுக்காக சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் எழுத்துமூல அறிவித்தலின் மூலம் உரிய பாடசாலையின் அதிபர் ஊடாக அருகில் உள்ள எந்த ஒரு பாடசாலைக்கும் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக சமூகமளித்து தமது பணியினை முன்னெடுக்க முடியும் என திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார் 

எவ்வாறாயினும் குறித்த அறிவிப்பு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்க்கமைய நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் போக்குவரத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை வலயத்திற்குட்பட்ட எந்த ஒரு பாடசாலையிலும் போக்குவரத்து காரணமாக எந்த ஒரு மாணவருக்கும் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்கும் போது பாடசாலை சீருடை மற்றும் காலணி தொடர்பில் சந்தர்ப்பம் வழங்குமாறும் மேலும் அருகிலுள்ள பாடசாலைக்கும் சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்கு இணையவழி மூலம் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.