Header Ads

Breaking News
recent

திருமலை  ஹபரணை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்து : நால்வர் படுகாயம்...


 ரவ்பீக்


பாயிஸ் 

திருகோணமலை ஹபரணை பிரதான வீதியில் வேன் ஒன்றும் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்துச் சம்பவம் இன்று (18) அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் தெரியவருவதாவது... 

கொழும்பிலிருந்து மட்டகளப்புக்குச் சென்ற வேன் ஒன்றும் திருகோணமலையிலிருந்து குருணாகலைக்குச் சென்ற லொறியொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் விபத்துக்குள்ளானோர் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தரிவித்தனர். 

மேலும் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்்  விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதுு. 
Powered by Blogger.