Header Ads

Breaking News
recent

நியூசிலாந்தின் தூதுவர் திருமலை ஊடகவியலாளர்கள் இடையில் சினேகபூர்வ சந்திப்பு : கிழக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்வு...



ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலரை இன்று நியூசிலாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மைக்கல் அபல்டன் இன்று (17) திருகோணமலை ப்ளூ நட்சத்திர விடுதியில் சந்தித்தார்.

இரண்டு நாட்கள் திருமலை பிரதேசத் விஜயம் மேற்கொண்டு திருகோணமலைக்கு வந்த நியூசிலாந்தின் தூதுவர் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு விடயங்களை ஆராய்ந்து வருகின்ற இதேவேலை இன்று சிரேஷ்ட ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையை எவ்வாறு ஊடகவியலாளர்கள் எதிர் கொள்கின்றார்கள் என பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களின் செயற்பாடு, தற்போது செயலாற்றுவதில் எவ்வாறான இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது எனவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது


இதேவேளை கிழக்கு மாகாணத்தில் செய்யப்பட உள்ள திட்டம் தொடர்பாகவும் எதிர்காலத்தில் பசி பட்டினியோடு வாழ்கின்ற மக்களுக்கு நியூசிலாந்து அரசாங்கம் மூலம் பல்வேறு உதவிகளை வழங்க காத்திருப்பதாகவும் இதன்போது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஊடகவியலாளருக்கு தெரிவித்தார்

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற விவசாயம் மற்றும் கால்நடை விவசாயத்திற்கு பல்வேறு உதவிகளை நியூஸிலாந்து அரசாங்கத்திடமிருந்து பெற்று வழங்குவதற்கு முயற்சி செய்வதாகவும் இதன்போது தெரிவித்தார்.






Powered by Blogger.