திருமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜே.எம்.சாலி நியமனம்...
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜே.எம்.சாலி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னால் அதிபர் எம்.பி.எம்.சமீம் அவர்கள் அவரது தனிபட்ட தேவை காரணமாக இடமாற்றம் பெற்று சென்ற வெற்றிடத்திற்கு பதிலாகவே புதிய அதிபரா எம்.ஜே.எம்.சாலி (SLPS II) அவர்கள் நியமிக்கப்பட்டு திருகோணமலை வலையக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் ஸ்ரீதரன் அவர்கள் முன்னிலையில் ஜமாலியா ஜூம்ஆ பள்ளிவாசலின் மௌலவி றிம்ஸான் அவர்களின் துஆ பிரார்த்தனையுடன் பாடசாலையில் தனது கடமையைப் இன்று (15) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.எம்.மஹ்மூத், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ்.எச்.எம்.அஸத், முன்னாள் பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர் எம்.பி.எம்.முஸ்தபா, முன்னாள் ஓய்வு நிலை பிரதி அதிபர் எ.எம்.எம்.பரீட், முன்னாள் பாடசாலையின் ஓய்வு நிலை ஆசிரியர் எ.எம்.எம்.ஷாஹுல் ஹமீத், முன்னாள் நகர சபை உறுப்பினர் என்.நூர் முஹம்மட், பொறியியலாளர் என்.எம்.சுகையில் மற்றும் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர் எம்.யூஸூப் பஹ்மி ஆகியோரின் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


