*திருமலை மாவட்டத்தின் சில வலயக்கல்வி பாடசாலைகளுக்கு விடுமுறை...*
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நகர்ப்புறத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் வழமைபோன்று இடம்பெறும் என கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
அதன்படி கடந்த திங்கட்கிழமை முதல் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகள் வழமைபோல் இயங்க ஆரம்பித்தது.
இவ்வாறு இருக்கையில் நாளை முதல் திருகோணமலையின் கந்தளாய் வலய பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் திருகோணமலையில் ஏனைய கல்வி வலதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் இதுவரை எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)