Header Ads

Breaking News
recent

ஊசி மூலம் ஹெரோயின் பாவித்த 20 வயது இளைஞன் பலி : இலங்கையில் சம்பவம்...



ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன,

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் வலிப்பு வந்து உயிரிழந்துள்ளார் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன,


யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்ட சலம் மாதிரியில் போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது. என யாழில் பிரபல ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது,

இளைஞனின் சடலம் நாளை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.