Header Ads

Breaking News
recent

நாளை திருமலையில் லிட்ரோ கேஸ் விநியோகம் - 22.07.2022



ADMIN 
நாளைய தினம் திருக்கோணமலை நகரில் 800 லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட உள்ளதாக திருகோணமலை லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகஸ்தர் தெரிவித்தார்.


அதன்படி நாளை (22) திருகோணமலை சிரிமா புற விகாரைக்கு அருகில் இவ்வாறு 800 லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் லிட்ரோ வாடிக்கையாளர்கள் தமது மே மாதத்திற்கான மின்கட்ட பட்டியலை சமர்ப்பித்து தமக்கான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளுமாறும் இதன் போது கேட்டுக் கொள்ளப்பட்ட ள்ளது.


மேலும் மே மாதத்திற்கான மின் கட்டண பட்டியலினை கொண்டு வராது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொள்வனவு செய்ய முடியாது எனவும் திருகோணமலை நகரில் ஏனைய பிரதேச மக்களுக்கு பெரிதொரு தினத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் எனவும் திருகோணமலை லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகஸ்தர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.